முல்லைத்தீவில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு ஆகிய பகுதிகளில் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்குமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவு மற்றும் கள்ளப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கால்நடைகள் கடத்தும் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை ஏற்படுத்தி தருமாறும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதனிடம் குறித்த பகுதி மாடு வளர்ப்போர் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
இறைச்சி விற்பனை
வாழ்வாதாரமாக தமக்கு சோறுபோடும் மாடுகளை கடத்தி வீட்டில் மடுவம் வைத்து
இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருசில மாதங்களுக்குள் 47 மாடுகள் கடத்தப்பட்டுள்ளன என்று மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக தாம் பொலிஸாருடனும் பிரதேச
சபை தவிசாளருடனும் கதைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
