ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடு கடத்துங்கள் : இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
பங்களாதேஷின் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை நாடு கடத்துங்கள் என பங்களாதேஷின் முக்கிய எதிர்க்கட்சி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்கள் இட ஒதுக்கீடு போராட்டம் பங்களாதேஷில் நடந்த நிலையில் அது வன்முறையாக மாறியதால் பிரதமர் பதவி விலகல் செய்துவிட்டு ஷேக் ஹசீனா பங்களாதேஷிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் அவர் மீது கொலை வழக்கு உள்பட சில வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி பி.என்.பி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஷேக் ஹசீனாவை பங்களாதேஷ் அரசிடம் சட்டபூர்வமாக இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இருப்பதால் இந்தியா அதற்கு உதவ வேண்டும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியது, கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தை தடுத்தது, அவருடைய தவறான அரசியலால் கடன் சுமை அதிகமானது ஆகியவை அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்றும் இதற்கு அவர் மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
