கைதான தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு, புதுச்சேரிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது
இதன்படி, கடந்த 28ஆம் திகதி அதிகாலை 2.40 மணியளவில் இலங்கை கடற்படையால் இந்திய கடற்றொழிலாளர்கள் 12பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் 10 பேர் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் தமிழக கடற்றொழிலாளர்கள் என்றும் வைத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு, கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று வைத்தியலிங்கம் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



