மட்டக்களப்பில் நெல் கொள்வனவு தொடர்பாக விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
மட்டக்களப்பில் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல் கொள்வனவினை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து வகையான நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் (24.07.2023) இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று நெல் கொள்வனவு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 80ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்களில் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் அறுவடைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுமுன்னெடுக்கப்படுகின்றன.
50மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படாத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின் அதிகாரசபை மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நெல் கொள்வனவு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக 50மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளது.
பட்டிப்பளையில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலையில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஒரு கிலோ 95வீதம் நெல் கொள்வனவு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் நிலையில் அனைத்து இன நெல்லையும் அனைத்து விவசாயிகளது நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
