உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: கிளிநொச்சி விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய தீர்வை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடுக் குளத்தின் பங்கீட்டு அடிப்படையில் பதினாறாயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அதன்படி வைத்தியங்கள் கொள்ளப்பட்டிருந்தது.
இருந்தபோதும் இரணைமடுக் குளத்தின் கீழான குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புகள் பயிர்செய்கை தீர்மானங்களையும் மீறி அதாவது சின்னக்காடு, பன்னங்கண்டி, புலிங்கதேவன் முறிப்பு உள்ளிட்ட அமைப்புகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்பை விட மேலதிகமாக இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கை
இதனால் குறிப்பிட்ட சில விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நீதி கோரி இன்றைய தினம் (23.07.2024) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரனிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
இதனை பொறுப்பேற்றுக் கொண்ட அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
''மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி குறிப்பிட்ட சில விவசாய அமைப்புகள் மேலதிக விதைப்புகளை மேற்கொண்டிருக்கிறது.
இதனால் ஒருபகுதி விவசாயிகள் பதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுபோக பயிர்செய்கை கூட்டத் தீர்மானத்திற்கு மேலதிகமாக ஏதாவது விதைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா? என்பது தொடர்பாக ஆராயும் பொருட்டு அதற்கான குழு ஒன்றினை நியமித்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |