கெஸ்பாவை ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு 'டெல்டா' வைரஸ் உறுதி
கெஸ்பாவையிலுள்ள ஆடை நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் ஐவருக்கு முதலில் டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்றும் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே, 120 பேருக்குக் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களின் மாதிரிகள் 'டெல்டா' பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri