கொழும்பில் உயிருக்கு ஆபத்தாக மாறிவரும் வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பில் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
தேசிய மருத்துவமனையின் பதிவுகளின் படி இந்த எண்ணிக்கை உயர்வு பதிவாகியுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது 200 பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகள் உள்ளனர் என்று தேசிய மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 100 ஆக இருந்தது, பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 160 ஆக இருந்தது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று உபுல் திசானநாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 200 நோயாளிகளில் 100 பேருக்கு ஒட்சிசன் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று உபுல் திசானநாயக்க தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடு இப்போது பொதுமக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் இருந்ததை விட இப்போது இந்த மாறுபாடு அதிக உயிருக்கு ஆபத்தானது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
