மட்டக்களப்பில் டெல்டா திரிபுடன் நோயாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா திரிபுகள் தொற்றிய நோயாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பரிசோதனைக்காக அனுப்பட்ட 3 மாதிரிகளில் இருவருக்கு டெல்டா தொற்றும், ஒருவருக்கு அல்பா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 10 மரணங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், மட்டக்களப்பில் சராசரியாக 300 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதுடன், மொத்தமாக 211 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
எனவே மக்கள் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam