கோவிட் வைரஸின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டது! - வெளியாகியுள்ள தகவல்
உலக நாடுகளுக்கு கோவிட் தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், தற்போது கோவிட் வைரஸின் மற்றும் ஒரு புதிய மாறுபாடு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு தற்போது மேலும் திரிபடைந்து புதிய டெல்டா பிளஸ் வகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2' மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2இன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் வைரஸின் டெல்டா, கப்பா, அல்பா, பீட்டா மற்றும் கம்மா ஆகிய மாறுபாடுகள் கணடுப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டெல்டா பிளஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
சூடுபிடிக்கும் காவி உடை களையப்பட்ட விவகாரம் - அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகா சங்கத்தினர்
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam