கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

Batticaloa Eastern Province Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Kumar Sep 20, 2024 06:51 AM GMT
Report

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு 

அதற்கமைய, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து காலை முதல் வாக்கு பட்டியல் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு | Delivery Ballot Boxes Polling Stations Batticaloa

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 4,49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய நேரகாலத்திற்கு சென்று செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் மனிதாபிமானம் அற்ற செயலை கண்டித்த இந்திய அரசியல் கட்சி

இலங்கை கடற்படையின் மனிதாபிமானம் அற்ற செயலை கண்டித்த இந்திய அரசியல் கட்சி


திருகோணமலை 

அதேவேளை, திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்குரிய வாக்குப் பெட்டிகள் திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இயங்கிவரும் வாக்குப்பெட்டி பொறுப்பேற்றல் மற்றும் விநியோகித்தல் நிலையத்தில் இருந்து இன்று (20) வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு | Delivery Ballot Boxes Polling Stations Batticaloa

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ள திருகோணமலை தேர்தல் தொகுதி, மூதூர் தேர்தல் தொகுதி மற்றும் சேருவில தேர்தல் தொகுதி ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 318 வாக்களிப்பு நிலையங்கள் தயார்நிலையில் உள்ளன.

அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை திருகோணமலை தேர்தல் தொகுதியில் 105005 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியில் 123363 பேரும், சேருவில தேர்தல் தொகுதியில் 87557 பேருமாக மொத்தம் 315925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

செய்தி - எப்.முபாரக் 

யாழில் இளம் தம்பதி கைது - விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

யாழில் இளம் தம்பதி கைது - விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இஸ்ரேலுக்கு பதிலடி வழங்கப்படும் : ஹிஸ்புல்லா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு பதிலடி வழங்கப்படும் : ஹிஸ்புல்லா எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US