பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு தீவிரம்
டெல்லி கார் வெடி விபத்தின் எதிரொலியாக பாம்பன் புதிய தொடருந்து பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10) மாலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் கண்டறியும் உலோகக் கண்டுபிடிப்பான் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய தொடருந்து பாலத்தில் தமிழ்நாடு தொடருந்து பொலிஸார் ஆயுதம் ஏந்தி பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாம்பன் பாலம் வழியாக அந்நிய நபர்கள் யாரையும் செல்ல அனுமதிக்காமல் கடற்றொழிலாளர்கள் பாலத்தில் அமர்ந்து கடற்றொழிலில் வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
பாம்பன் தொடருந்து பாலம் வழியாக வரும் தொடருந்து படிகளில் அமர்ந்து செல்பி எடுக்கும் பயணிகளை உள்ளே செல்லுமாறும், வெளியே நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam