அயலுறவுக்கு முதலிடம்! ஆபத்துக்கு உதவும் இந்தியா(Photo)

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Economic Crisis India
By Dias Jun 24, 2022 07:15 AM GMT
Report

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கிவருகின்றது.

இதற்கமைய இலங்கை மக்களுக்கான உதவி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக உலர் உணவு பொதிகள்  இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விசேட தூதுக்குழுவினர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் நேற்று(23) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

அயலுறவுக்கு முதலிடம்! ஆபத்துக்கு உதவும் இந்தியா(Photo) | Delegation Secretary Vinay Quadra Visits Colombo

இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் பொருளாதார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் செயலாளர் அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அயலுறவுக்கு முதலிடம் 

அயலுறவுக்கு முதலிடம்! ஆபத்துக்கு உதவும் இந்தியா(Photo) | Delegation Secretary Vinay Quadra Visits Colombo

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கமைய 'அயலுறவுக்கு முதலிடம் கொள்கை' வழிகாட்டலின் அடிப்படையிலேயே இலங்கை மக்களுக்கான 3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான ரீதியிலான உதவி அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமருடன் இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்தும் பொருளாதார மீட்சிக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இரு தரப்பினரிடையிலும் இடம்பெற்றுள்ளன.

கலந்துரையாடல்

இதன்போது உட்கட்டமைப்பு, தொடர்பாடல்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி, மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுவாக்கல் உள்ளிட்ட விடயங்கள், முதலீட்டு பங்குடைமையை மேம்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் இருதரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அயலுறவுக்கு முதலிடம்! ஆபத்துக்கு உதவும் இந்தியா(Photo) | Delegation Secretary Vinay Quadra Visits Colombo

மேலும் பயங்கரவாத ஒழிப்பு, கடல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், மனிதாபிமான உதவி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தக ரீதியான உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டுவரும் உறுதியான ஆதரவை இலங்கை தரப்பினர் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

ஜி.எல்.பீரிஸுடன் சந்திப்பு

அயலுறவுக்கு முதலிடம்! ஆபத்துக்கு உதவும் இந்தியா(Photo) | Delegation Secretary Vinay Quadra Visits Colombo

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, நேற்று வியாழக்கிழமை ருவாண்டாவில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்தார்.

இந்தநிலையில், ஜி.எல்.பீரிஸுடன், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை பற்றி பேசியதாக ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US