''சூரிய களங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம்''
அநேகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவை உபகுழுவின் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் இவற்றைத் தேசிய மின் கட்டமைப்பிற்குள் இணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்காமை மற்றும் தாமதப்படுத்துவது தொடர்பில் துரிதமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை உபகுழு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டிலும் சூரிய களங்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இது வரை இணைக்கப்படவில்லை என்பது இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்புக்கான இணைப்பை வழங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் சென்றுள்ளதாக அமைச்சரவை உபகுழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக
அமைச்சரவை உப குழு கவனம் செலுத்தியதையடுத்து, அதனைத் தேசிய மின் கட்டமைப்புடன்
இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam