இலங்கைக்கு பெரும் ஆபத்தான இந்திய கடற்படையின் தாமதம்
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரியும் போது இந்தியா கட்டாயமாக சூழலியல் தொடர்பில் சிந்தித்து இருந்தால் உடனே வேகமாக,அக்கறையுடன்,விரைவுடன் தீப்பரவலை கட்டுப்படுத்தி இருக்கும்.
எனவே இந்தியா அவ்வாறு செயற்படாமல் பின்வாங்கி இருந்தமைக்கு முக்கியமாக அரசியல் காரணமாகவே அமைந்திருக்கலாம் என சூழலியலாளரும், முன்னாள் வட மாகாண சபையின் விவசாய அமைச்சருமான ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவை வெறுமனே நீர்கொழும்பு,கொழும்பு கடற்கரைகளை மாத்திரம் பாதிக்கின்ற விடயம் இல்ல.இந்து சமுத்திரத்தின் பிராந்தியத்தில் காணப்படும் அனைத்து நாடுகளின் கரையோரங்களையும் பாதிக்கின்ற விடயமாகும்.
பொலித்தீன்,பிளாஸ்டிக்,எண்ணெய் என்பன கரையொதுங்குவதினால் ஏற்படப்போகும் பாரிய பேரழிவுகளை இந்தியா சூழல் தொடர்பில் சந்தித்து இருந்தால் நிச்சயமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும்.
இரண்டு நாடுகள் தவிர்த்தும் இலங்கை பேர்ள் கப்பலை நாட்டிற்குள் அனுமதித்தமை இலங்கை தெரிந்து செய்த தவறாகவே கருதப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
