பேருந்து நிலையத்தினை இயங்க வைப்பதில் இழுபறி: முல்லைத்தீவு அபிவிருத்திகுழு கூட்டத்தில் முரண்பாடு
முல்லைத்தீவு பேருந்து நிலையத்தினை இயங்க வைப்பதில் பல வருடங்களாக காணப்பட்ட இழுபறி தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நீண்ட நேர விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதனை இயங்க வைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறி நேற்று (03.08.2023) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜசிந்தன் தெரிவிக்கையில், "தனியார் பேருந்து சங்கத்தினால் கூறப்பட்ட ஏற்பாடுகள் பிரதேச சபையினால் 100 வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது வேறுவிதமான பிரச்சினையை கூறுகிறார்கள். முள்ளிவாய்க்காலால் பேருந்து வரும் என்றால் பேருந்து நிலையத்தில் பேருந்து செல்வதற்கு எந்த இடையூறும் இல்லை.
கடந்த மாதம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன இன்று வேறு பிரச்சினையை கூறுவதாக இருந்தால் நாங்கள் நிதியை வீண்விரயம் செய்திருக்கிறோம்." என தெரிவித்தார்.
மாவட்ட பேருந்து நிலையம் போல் இல்லை
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறுகையில், "நீங்கள் முரண்பட்டது சரி ஏனைய மாவட்ட பேருந்து நிலையங்களுடன் ஒப்பிடும் போது இது சாதாரண பேருந்து தரிப்பிடம் போலவே இருக்கிறது. மாவட்ட பேருந்து நிலையம் போல் இல்லை.
பிரதேச சபையில் வளங்கள் குறைவு. அதனை பயன்படுத்தி அவர்கள் வேலைகளை செய்திருக்கின்றார்கள். ஏற்கனவே இவ்வாறு போக முடியாது என கூறியிருந்தால் நான்கு , ஐந்து வீதியையாவது போட்டிருப்பார்கள். சண்டை நேரத்தில் காபெட் போட்டு பேருந்து ஓடவில்லை.
இது மக்களுக்கான சேவை எல்லோரும் மனச்சாட்சிபடி இருக்கிறதனை சமாளித்து நடவுங்கள். எதிர்கால வேலைத்திட்டங்களை மேற்கொண்டு தருவோம்.” என தெரிவித்துள்ளார்.
இதன் போது அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கூறுகையில் ,"பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்ட 16க்கும் மேற்பட்ட மின்விசிறிகள், மின்குமிழ்கள் களவாடப்பட்டிருக்கிறது. அரச சொத்து இவ்வாறான நிலையில் காணப்படுகிறது என தெரிவித்தார்.
10 மில்லியன் நிதியில் பேருந்து நிலையம்
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மஸ்தான் தெரிவிக்கையில், "அனைத்து வேலைகளையும் செய்து முடித்ததன் பின்னர், “வவுனியாவைப்போல் பேருந்து நிலையம் தான் தேவை, அவ்வாறு செய்து தந்தால் தான் போவோம்” என்றால் அது கடினமானதாக காணப்படும்.
ஒரு முடிவை நாங்கள் எடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பேருந்து நிலையத்தை இயங்க வைக்க கடின முயற்சியுடன் செயற்படுகின்றார்கள்.
மேலும், வவுனியாவில் 10 மில்லியன் நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை இ.போ.ச மற்றும் தனியார் துறையினரின் பிடிவாதத்தால் வேறு விதமாக இயங்க வைக்கப்பட்டது. இங்கும் அவ்வாறானதொரு நிலை காணப்படுகிறது.என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
