மாகாண சபைத் தேர்தல் தாமதம் : ரவி எம்.பி கடும் எச்சரிக்கை

Provincial Council Colombo Parliament of Sri Lanka Ravi Karunanayake
By Rakesh Jan 20, 2026 03:07 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று((19.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீதியில் மாஸ் காட்டிய அநுர - கடற்கரையில் மாஸ் காட்டிய மகிந்த!

வீதியில் மாஸ் காட்டிய அநுர - கடற்கரையில் மாஸ் காட்டிய மகிந்த!

அரசின் தொடர்ச்சியான பயணத்துக்கு

அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

மாகாண சபைத் தேர்தல் தாமதம் : ரவி எம்.பி கடும் எச்சரிக்கை | Delay In Provincial Council Elections Ravi Mp

எவ்வாறிருப்பினும் பொருத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும். மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது.

இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

அவ்வாறில்லை எனில் அது அரசின் தொடர்ச்சியான பயணத்துக்குச் சிறந்த பாதையல்ல. உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது. தாம் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு செல்வதாக இந்த அரசு கூறிக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் 

அவ்வாறெனில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை அரசே கூற வேண்டும். அரசமைப்புக்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசு கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொறுத்தமான ஒருவரைத் பரிந்துரைக்கத் தவறியிருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தல் தாமதம் : ரவி எம்.பி கடும் எச்சரிக்கை | Delay In Provincial Council Elections Ravi Mp

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கணக்காய்வுத் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகின்றது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொறுத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் சொந்த மண்ணில் மொட்டுவின் பலம் நிரூபணம்! மொட்டு கட்சி பெருமிதம்

அநுரவின் சொந்த மண்ணில் மொட்டுவின் பலம் நிரூபணம்! மொட்டு கட்சி பெருமிதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US