PCR பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் - தனிமைப்படும் நாட்கள் குறைப்பு
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் PCR முடிவுகள் தாமதமாக கிடைப்பதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாவதனால் கொரோனா நோயாளிகளின் சரியான தகவல்கள் வழங்குவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா தடுப்பிற்கு உரிய தீர்மானம் பெறுவதற்கு சிக்கலான நிலைமை உருவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொரோனா நோயாளிகள் தொடர்பிலான தகவல்கள் சில நாட்கள் கடந்த பின்னரே வழங்க முடிகின்றது.
PCR முடிவுகள் 2 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். எனினும் அதற்கு 5 நாட்களாகின்றன. அதற்கமைய தொற்றுக்குள்ளான நபரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவற்கு அம்பியுலன்ஸ் வண்டி தேடுவதற்கு மேலும் 2 நாட்கள் ஆகின்றன.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை நிலையங்களில் தங்க வைக்கப்பட வேண்டிய காலப்பகுதி 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறு தாமதமாகும் நோயாளிகள் 3 நாட்கள் மாத்திரமே சிகிச்சை நிலையத்தில் தங்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அவ்வாறான தொற்றாளர்களை தூர பிரதேசங்களுக்கு அழைத்து செல்வது தேவையற்ற விடயமாகிவிடுகின்றது. சில நபர்கள் 9 நாட்கள் வீடுகளிலேயே உள்ளனர். ஒரு நாள் மாத்திரம் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தாமதமாக மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.