தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய தோர் என்ற சிங்கத்திற்கு நிமோனியா நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக விசேட சிகிச்சைகள் மீளவும் ஆரம்பமாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கத்தின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கத்தின் சுகாதாரம் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும், தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சிங்கம் எல்பா கொவிட் மாறுபாடு தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.