தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு
தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.