வெளிநாட்டில் உள்ளவரின் கொழும்பு ஹோட்டலை தரைமட்டமாக்கிய பொலிஸார்
வெளிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்கு சொந்தமான தெஹிவளை ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை கடற்கரையில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படட போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான ஹோட்டல் வளாகம் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் கரையோர பாதுகாப்பு பிரிவினரால் இடிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
குறித்த விடுதி அனுமதியற்ற கட்டிடம் என அடையாளம் காணப்பட்டு, பொலிஸாரின் உதவியுடன் கடலோர காவல்படை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்ற சென்ற அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டலின் பணிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



