செயற்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் தீர்க்கப்படும்
தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையின் எல்லை திறந்துள்ள நிலையில் செயற்படுத்தப்பட்டுள்ள பரீட்சார்த்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் தீர்க்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரம் யுக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மத்தளை சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் உரியமுறையில் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்க நடனங்கள் மற்றும் பிற கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. எனினும் நிகழ்ச்சிகளின் போது நடனக் கலைஞர்கள் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது பரீட்சாத்த செயற்பாடு என்பதால் இதில் உள்ள குறைப்பாடுகள் எதிர்காலதத்தில் தீர்க்கப்படும் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் இலங்கைக்கு வந்த முதல் தொகுதி சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ்களுடன் வந்தபோதும் மூன்று யுக்ரெய்னியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இது இலங்கை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.