ஹொங்கொங் சிக்ஸஸ் 2024 கிண்ணத்தில் பாகிஸ்தானை முறியடித்த இலங்கை
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை (Pakistan) மூன்று விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி, ஹொங்காங் சிக்ஸஸ் 2024 கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இன்று (03) நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லிஹிரு மதுசங்க முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தார்.
விக்கெட்டுக்கள்
இதன்படி, துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, 5.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் அஹ்லாக் 48 ஓட்டங்களை பெற்றார்.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இதில் சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களை பெற்றார். அணித்தலைவர் லிஹிரு மதுசங்க 19 ஓட்டங்களையும், தரிந்து ரத்நாயக்க 16 ஓட்டங்களையும் இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
