கிண்ணியா நகர சபையின் பாதீடு தோற்கடிப்பு(VIDEO)
கிண்ணியா நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 2 வாக்குகளால் தோற்க்கடிக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இன்று (14) மாலை சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
தவிசாளர் வரவு செலவு திட்டம் தொடர்பில் உரையாற்றியதை தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு இடம் பெற்றது.
குறித்த வாக்கெடுப்பின்போது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக 07 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இச் சபையில் மொத்தமாக தவிசாளர் உட்பட 13 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வரும் நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் உறுப்பினர் நாஸிக் மஜீத் சபை அமர்வுக்கு இன்றைய தினம் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






