எஸ்.பி திஸாநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு:நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்ட வழக்கு மீள் பெறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கவிற்கும் ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு 2020.07.17 ஆம் திகதி ரிஷாட் பதுர்தினால் தாக்கல் செய்த மனு கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தால் இன்று எடுத்துக்கொள்ளபட்டுள்ளது.
வழக்கினை மீள் பெறுதல்
2020.05.29 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்புப்பட்ட செய்தியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் எஸ்.பி திஸாநாயக்க கருத்துக்களை தெரிவித்ததை எதிர்த்து, எஸ்.பி திஸாநாயக்கவையும் ஹிரு தொலைக்காட்சியையும் எதிராளிகளாக குறிப்பிட்டு ரிஷாட் பதுர்தீன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் வழக்காளியான ரிஷாட் பதுர்தீன் வழக்கினை மீள் பெறுவதாக நீதிமன்றுக்கு அறிவித்ததை அடுத்து இன்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரியும் சட்ட நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணி தர்மராஜாவும் முன்னிலையாகினர்.
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam