மலையகத்தில் அதிகரித்துள்ள மான்கள்
மலையக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் மணல் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலையக சுற்றாடல் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
வெட்ட வெளிகளில் நடமாடும் மான்கள்
தேயிலை தோட்டங்கள், காடுகள் மற்றும் வெட்ட வெளிகளில் இந்த மான்கள் அடிக்கடி நடமாடி வருவதை காணக் கூடியதாக உள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சில இடங்களில் வெட்ட வெளியான இடங்களிலும் இந்த மான்கள் அடிக்கடி நடமாடி வருவது கண்காணிக்கப்பட்டுள்ளது. மணல் மான்கள் மனிதர்களின் குரல்களுக்கோ, வாகனங்களின் சத்தங்களுக்கு அச்சப்படாது நடமாடி திரிக்கின்றன.
காடுகளில் இருக்கும் மலையக சிறுத்தைகள் மற்றும் ஏனைய ஊண் உண்ணி விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வெட்ட வெளிகளில் நடமாட இந்த மான்கள் விரும்புகின்றன.
மணல் மான்கள் மக்கள் அடிக்கடி நடமாடும் இடங்களில் சுற்றி திரிவதால், அவை நாய்களின் கடிகளுக்கு உள்ளாகி வருவதுடன் இரவு நேரங்களில் வாகனங்களில் மோதுண்டு சாகலாம் எனவும் பாதுகாப்பற்ற குழிகளிலும் கிணறுகளிலும் விழுந்து விடலாம் என்பதுடன் இறைச்சிக்காக கொல்லப்படலாம் எனவும் மலையக சுற்றாடல் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
