ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து தினேஷ் சந்திமால் கடும் அதிருப்தி

Dinesh Chandimal
By Kamal Apr 04, 2026 05:49 PM GMT
Report

ஊடக நிறுவனங்கள் சரி பார்க்கப்படாத தகவல்களை வெளியிடக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரிபார்க்கப்படாத தகவல்கள் தேவையற்ற அழுத்தம் மற்றும் மன அழுத்தம், உணர்ச்சி பாதிப்புகளை வீரர்களுக்கு ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

தான் தேவையான உடற்தகுதி (Fitness) பரிசோதனையை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து தினேஷ் சந்திமால் கடும் அதிருப்தி | Deeply Hurt Chandimal Responds

தேவையான உடற்தகுதி பரிசோதனையை நான் வெற்றிகரமாக கடந்துள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எனக்கு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து பொதுவெளியில் கூடுதல் தகவல்களை வெளியிடத் தேவையில்லை எனவும், அணி முகாமைத்துவமும் தாமும் உண்மைகளை நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஊடக ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சந்திமால், சரிபார்க்கப்படாத தகவல்கள் ஒரு வீரரின் தொழில்வாழ்க்கை, புகழ் மற்றும் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

வீரர்களின் தனிப்பட்ட மற்றும் நுணுக்கமான தகவல்கள் ஊகங்களுக்கு பயன்படுத்தப்படாமல், வீரர்களும் அணி முகாமைத்துவத்திற்கும் இடையே மட்டுமே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது தெளிவான ஆதாரங்களை குறிப்பிட ஊடக நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன எனவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அவசியம் எனவும் தினேஷ் சந்திமால் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், சில உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறிய பட்டியலை பல இலங்கை கிரிக்கெட் வீரர்களும் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, ரசிகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சந்திமால், வீரர்களைச் சார்ந்த நுணுக்கமான தகவல்களை வெளியிடுவதற்கு முன் உண்மைகளை சரிபார்க்குமாறு ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.  

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US