பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை பொதுமக்களுக்கு மேலும் ஒரு பிரச்சினை!(Photos)
இலங்கையில் டொலர் பொருளாதார நிலைமை பாரிய வீழ்ச்சியை எட்டிள்ள அதனுடன் இணைந்த சேவைகளும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக பெற்றோலியப் பொருட்கள் மற்றும் மின்சார விநியோகத்தில் பொதுமக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
டொலர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பவற்றின் இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
களளிதிஸ்ஸ மின்சார நிலையம்
இதன் காரணமாக இலங்கைக்குள் மின்சாரம் விநியோகத்தில் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை மின்சார சபையின் பிரதான நீர்மின் தேக்கங்களில், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 95.8 வீதமாக இருந்த நீர்மட்டம், கடந்த வெள்ளிக்கிழமை மொத்த சேமிப்பு 56.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ, மவுஸ்கெல்லை, கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ போன்ற நீர் தேங்கங்களின் நீர் மட்டங்கள் குறைந்துள்ளன.
விக்டோரியா நீர்தேக்கம்
இதில் விக்டோரியா, கொத்மலை மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்கள் விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன
எனவே விக்டோரியா மற்றும் ரன்தெனிகல ஆகிய நீர்த் தேக்கங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவை குறைக்குமாறு மஹாவலி அதிகார சபை, மின்சார சபையிடம் கோரியுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கம்
இதற்கிடையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளின் மூலம் மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் திட்டங்கள் இதில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
இதன்கீழ், 10 மெகாவாட் அல்லது அதற்கும் குறைவான திட்டங்களை உருவாக்க விரும்பும் தனியார் துறையினரை ஊக்குவிக்கும் வகையில், மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் விரைவாக கையெழுத்திடும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனைக்கொண்டு 2030 ஆம் ஆண்டிற்குள் 70 சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அரசாங்கக் கொள்கையாக கூறப்பட்டுள்ளது.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
