கோவிட் தொற்றால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை
கோவிட் -19 தொற்று நோய் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியுடன் இலங்கையின் பொருளாதாரமும் சுதந்திரத்திற்கு பின்னர் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 3.6 வீதமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று நோயின் பாதிப்பு நீங்கி இலங்கையின் பொருளாதாரம் வேகமடைந்தால், 2021 ஆம் ஆண்டு 6 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். பொருளாதார வளர்ச்சியை அடிப்டையாக கொண்ட கொள்கை ரீதியான ஒத்துழைப்பின் மூலம் குறுகிய கால வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளால், பொருளாதாரத்துறையில் அனைத்து விடயங்களுக்கும் தடையேற்பட்டுள்ளது.
நிர்மாணத்துறை மற்றும் உற்பத்தி துறைகளின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri