அடுத்த சில மாதங்களில் மையப் பணவீக்கத்தில் ஏற்படவுள்ள வீழ்ச்சி
தற்போது தாழ்ந்தளவிலான நேர்மறையான மட்டங்களில் காணப்படுகின்ற மையப் பணவீக்கமானது, மேல்நோக்கிச் சீராக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த சில மாதங்களில் மேலும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதன்மைப் பணவீக்கமானது இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதற்கு முன்னர் குறுங்காலத்தில் எதிர்மறையாகத் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்வு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2024 டிசெம்பரில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக எதிர்மறையான வீச்சில் தொடர்ந்தும் காணப்பட்டது.
பணச்சுருக்கம்
இது மிதமடைந்த கேள்வி அழுத்தங்களிற்கு மத்தியில் மின்சாரத் தீர்வைகள் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகள் என்பவற்றிற்கான முந்தைய கீழ்நோக்கிய திருத்தங்களினால் முக்கியமாக உந்தப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சாரத் தீர்வையின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கீழ்நோக்கிய சீராக்கத்தின் காரணமாக முன்னர் எதிர்வு செய்யப்பட்டதிலும் பார்க்க தாழ்ந்தளவிலான பணச்சுருக்கத்தினை அண்மைய எதிர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
பணவீக்கமானது பொருத்தமான கொள்கைச் சீராக்கங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, 2025இன் நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாகத் திரும்பலடைந்து, நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கி ஒருங்கிணையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri