நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, கொழும்பு மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றுத் தர குறியீடு (AQI) நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலை என்ற மட்டத்தை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் சிறப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

• சிறிய குழந்தைகள்
• கர்ப்பிணிப் பெண்கள்
• முதியவர்கள்
• சுவாச நோய்கள் உள்ளிட்ட நீடித்த உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள்
மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியில் அதிக நேரம் இருப்பதனை தவிர்ப்பது, முகக்கவசம் அணிதல் மற்றும் சுவாச சிக்கல்கள் தோன்றின் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் போன்ற நடவடிக்கைகள் முக்கியம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைய நாட்களாகவே இலங்கையில் அடிக்கடி காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.