இமயமலை பிரகடனத்திற்கு தமிழ் அமைப்புகளின் கூட்டு வெளியிட்டுள்ள எதிர்ப்பு
உலக தமிழ் பேரவை மற்றும் சிங்கள பௌத்த மதகுருமார்கள் கையெழுத்திட்ட பிரகடனத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகளின் கூட்டு, குரல் எழுப்பியுள்ளது.
இந்த முயற்சியை 'துரோக' செயல் என்று தமிழ் அமைப்புக்களின் கூட்டு தெரிவித்துள்ளது.
உலக தமிழர் பேரவை மற்றும் சில தனியாரின் இந்த துரோக முயற்சியானது சர்வதேச சமூகத்திலிருந்தும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணையிலிருந்தும் இலங்கையை பாதுகாக்கும் வெறுக்கத்தக்க முயற்சியாகும் என்றும் அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்
அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல், சிங்கள நில அபகரிப்பு மற்றும் இலங்கை பொலிஸாரின் செய்ற்பாடுகள் போன்றவற்றின் கீழ் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பதையும் :தமிழ் அமைப்புகளின் கூட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே உலக தமிழர் பேரவையின் இந்த முன்முயற்சியை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ் அமைப்புகளின் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம் இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் 'தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண வேண்டும்' எனவும் அந்த கூட்டில் இணைந்துள்ள அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச ஈழத் தமிழர் பேரவை, கனடாவின் தமிழர்களின் தேசிய சபை, ஈழத் தமிழர்களுக்கான நோர்வே சபை, இத்தாலிய தமிழர் பேரவை, ஜெர்மனியில் ஈழத் தமிழர் பேரவை,நியூசிலாந்து தமிழர்களின் தேசிய சபை, நெதர்லாந்து தமிழ் மன்றம், பெல்ஜியத்தின் தமிழ் கலாச்சார மையம்,பின்லாந்து தமிழ் மன்றம், ஸ்வீடன் தமிழர்களின் தேசிய சபை, அவுஸ்திரேலிய தமிழ் நீதிக்கான பிர்சாரம், டென்மார்க் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ பிரான்ஸ் அமைப்பு, சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை, ஐக்கிய ராச்சிய ஈழத் தமிழர்கள் பேரவை, மொரீயஸின் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம், தென்னாபிரிக்காவின் இலங்கையில் சமாதானம் மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு என்பன இது தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
