அனைத்து முடிவுகளையும் அவர் தனியாக எடுக்கவில்லை! ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர (P.B.Jayasundra) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக இன்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இன்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் உடனான கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பீ.பி. ஜயசுந்தரவை பாதுகாத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளமை விசேட நிகழ்வாக அமைந்துள்ளது.
அங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, அனைத்து முடிவுகளும், பீ.பி. ஜயசுந்தர தனித்து எடுத்த முடிவுகள் அல்ல எனவும் அவை அமைச்சரவை மற்றும் அமைச்சர்களால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனால், பீ.பி. ஜயசுந்தரவுக்கு எதிராக மாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பீ.பி. ஜயசுந்தர வழங்கிய பதவி விலகல் கடிதத்தை கையளித்த போதிலும் அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி, தனது செயலாளரான ஜயசுந்தரவை பாதுகாத்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan