அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு: இலங்கை கூறிய நியாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இலங்கை பிணைக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் சில முடிவுகளை எடுக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
கட்டணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வோசிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட சில அளவுருக்களுக்கு இணங்க வேண்டும் என்ற விடயத்தை அமெரிக்காவிடம் தெரிவித்ததாக பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது மற்ற நாடுகள் எதிர்கொள்ளாத சில சவால்கள் இலங்கைக்கு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமற்ற வரிகள்
இந்தநிலையில்,கட்டணப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை சந்தையில் நியாயமான அணுகலை அமெரிக்கா கோரியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க தயாரிப்புகள் மீது இலங்கையில் நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் வெற்றி ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்கான வழிகளை இலங்கையும் அமெரிக்காவும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவிலிருந்து மொத்தமாகவும் பாரிய அளவிலும் வாங்கப்பட்ட பொருட்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சூரியப்பெரும கூறியுள்ளார்.
இதன்படி இலங்கை அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய ஒரு முக்கிய பகுதியாக எரிசக்தித் துறை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam