ஜானதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: ரெலோ ஊடகப் பேச்சாளர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
இனவாத சக்திகள்
இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
அரசியல் நலன்
இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![கிளீன் தையிட்டி..!](https://cdn.ibcstack.com/article/0cf0c8c5-ad68-4e31-841a-7e29cf4596c2/25-67b1e86bd37bd-md.webp)
கிளீன் தையிட்டி..! 1 மணி நேரம் முன்
![உக்ரைன் அமைதி பணிக்கு பிரித்தானியா தயார் நிலையில் இல்லை-முன்னாள் ராணுவத் தலைவர் வலியுறுத்தல்](https://cdn.ibcstack.com/article/225449b6-ce04-433e-8571-46a9f50158e9/25-67b0bdc8d2c04-sm.webp)
உக்ரைன் அமைதி பணிக்கு பிரித்தானியா தயார் நிலையில் இல்லை-முன்னாள் ராணுவத் தலைவர் வலியுறுத்தல் News Lankasri
![எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம்](https://cdn.ibcstack.com/article/a4622e50-0727-4014-8655-63dbfe5388a4/25-67b0ee84a76db-sm.webp)
எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri
![43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்](https://cdn.ibcstack.com/article/2b7e06f8-b8d3-4df6-b027-77adf78aedf7/25-67b05755ba16c-sm.webp)
43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
![எப்போதும் முத்து தான், ஆனால் இப்போது அண்ணாமலையால் ரோஹினிக்கு வந்த பிரச்சனை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ](https://cdn.ibcstack.com/article/96f33f65-9da5-4c12-ba53-6da2f325e438/25-67b049221d688-sm.webp)