அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது: அன்னராசா

Arrest Northern Province Navy Fishermen
By Independent Writer Jan 24, 2022 08:12 PM GMT
Report

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு எடுத்த முடிவு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட பல இந்திய மீனவர்களின் படகுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து சில தினங்களுக்கு வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏலம் விடுவதற்கு இலங்கை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்தச் செயற்பாடு காலம் கடந்ததாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஒருசில நாட்டுப்படகுகளும் இதனுள் இருப்பதாக அறிகிறோம்.

இலங்கையின் சட்டம் என்று வரும்போது நாட்டுப்படகு, விசைப்படகு என எல்லாம் ஒன்றுதான். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அரசியல் செல்வாக்குள்ள தமிழ்நாட்டு முதலாளிகளே இழுவைமடி தொழிலை இங்கு ஊக்குவிக்கின்றனர். அவர்களது படகுகளே இதனால் பாதிப்படையும்.

நேற்றைய தினமும் பருத்தித்துறை தொடக்கம் மருதங்கேணி வரையிலான பகுதிகளில் பல நூறு படகுகளில் இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி வந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனால் உள்ளூர் மீனவர்கள் அச்சத்திலேயே தொழிலுக்குச் செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US