பிரதேச சபைகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை, மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, மிகவும் வினைத்திறனான பொதுச் சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
இதற்கமைய, நாட்டில் தற்போது 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கிய 341 உள்ளூராட்சி அதிகார சபைகள் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில உள்ளுராட்சி அதிகார சபைகள் தேவையான வருமான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், போதிய வருமான ஆதாரங்கள் இல்லாத சில உள்ளூராட்சி அதிகார சபைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை மாநகர சபை அல்லது அவற்றுடன் அண்மித்துள்ள நகர சபையுடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.