கோவிட் தொற்று: - கடன் அட்டைகள் தொடர்பாக வங்கிகள் எடுத்த முடிவு
இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் பயன்படுத்தப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்துள்ளன.
62 ஆயிரம் கடன் அட்டைகளை இரத்துச் செய்த போதிலும் புதிய கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதன் காரணமாக 2021 செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட 18 லட்சத்து 56 ஆயிரத்து 191 கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது நவம்பர் மாத இறுதியல் 18 லட்சத்து 94 ஆயிரத்து128 ஆக அதிகரித்துள்ளது.
37 ஆயிரத்து 937 கடன் அட்டைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன.
எவ்வாாறாயினும் இரத்துச் செய்யப்பட்ட 62 ஆயிரம் கடன் அட்டைகளில் 150 கடன் அட்டைகள் இலங்கையில் மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை. ஏனைய அனைத்து அட்டைகளும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தக் கூடியவை.
ஒரு தொகை கடன் அட்டைகளை வங்கிகள் இரத்துச் செய்திருந்தாலும் 2021 ஒக்டோபர் இறுதி வரையான காலம் வரை கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை124.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
செலுத்த வேண்டிய இந்த தொகையானது கடந்த செப்டம்பர் மாதம் 121 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய முழு தொகையானது 117 பில்லியன் ரூபாயாக இருந்தது.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடன் அட்டைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமை மற்றும் இணையத்தளம் வழியாக செலுத்தும் முறை வரையறுக்கப்பட்டமை என்பன இவ்வாறு பெருந்தொகையான கடன் அட்டைகளை இரத்துச் செய்ய ஏதுவாக அமைந்தன என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
