மன்னாரில் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்
மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வினை தற்காலிகமாக நிறுத்த மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நேற்றையதினம்(03.01.2025) மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வைத்து விடுத்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் மன்னார் தொடருந்து போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற்றாலை மின்சார திட்டம், மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
பாரிய எதிர்ப்பு
இதன்போது, இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அந்தத் திட்டத்தின் முகாமையாளர் முயன்ற போது, கிராம மட்ட பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற மக்கள் விரும்பாத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |