நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது அநீதியான முடிவாகும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Colombo People Johnston Fernando Fertilizer
By Independent Writer Oct 31, 2021 10:02 AM GMT
Report

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ள பேலியகொட புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

புதிய களனி பாலம் கொழும்பு நகரின் அழகை மேம்படுத்தும் என்பதால் கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்திற்கருகில் நிலத்தை அழகுபடுத்துவதற்காக நடப்பட்டுள்ள உள்ளூர் தாவரங்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.

புதிய களினி பாலம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் என்பன எப்பொழுது மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

களனி பாலத்தின் பணிகளை நிறைவு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்குத் திறக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை மீரிகம தொடக்கம் குருநாகல் வரை பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்குத் திறக்க எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சிறு கட்சிகள் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிறு கட்சிகளைச் சேர்ந்த குழுவொன்று தற்போது தனித்தனியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளன.

பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது. சிறு கட்சிகளின் இந்தக் கூட்டங்கள் எமக்கு ஒரு பிரச்சினையல்ல. அரசாங்கம் என்ற வகையில் நாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாகத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது. தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும். அண்மையில் துறைமுக தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையத்தை வழங்குவதை எதிர்த்தன.

இதன் விளைவாகக் கிழக்கு முனையத்திற்குப் பதிலாக அதனை விடப் பெரிய மேற்கு முனையம் வழங்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றன? குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அது ஊழல் ஆகாது. தொழிற்சங்கங்கள் அதிக விலைக்குச் சார்பாக இருந்தால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் இந்த நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருட்டில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும். இதை அறிவுள்ள நாட்டு மக்கள் கவனமாகப் பார்க்க வேண்டும்.

இந்த நேரத்தில் மின்சார விலையைக் குறைக்கும் அரசின் திட்டம் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.

விவசாயிகள் முகங்கொடுத்துள்ள பசளை பிரச்சினை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

பசளை விவகாரத்தின் பின்னணியில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் யார் என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். குருநாகல் உட்படப் பல விவசாய மாவட்டங்களில் ஏற்கனவே விவசாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் ஆரம்பிக்கப்படாத மாவட்டங்களில் விவசாயம் செய்வதைத் தடுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

பசளை பிரச்சினைக்கு இன்னும் சில நாட்களில் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்று இழப்பீடு வழங்குவதாக இருந்தால் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை. இந்த எதிர்ப்பு அலைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிடுகிறார்கள். அப்பாவி மக்களை நெருக்க வேண்டாம் என எத்திரணியைக் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் நைட்ரிஜன் பசளை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் பதில் வழங்கினார்.

புதிதாக ஒன்றைப் பழக முயலும் போது இவ்வாறு பிரச்சினைகள் வருவது சகஜம்தான். அரசாங்கம் என்ற வகையில் நாம் இதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றோம்.

கோவிட் தொற்றுநோய் மற்றும் பசளை விவகாரத்தைத் தேர்தல் லாபம் பெறுவதற்காகப் பயன்படுத்த முயல வேண்டாம் என்று கட்சியினரைக் கோருகின்றன. பிரேமதாச இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார். திஸாநாயக்க ஆறிலிருந்து மூன்றுக்குக் கீழே சென்றதும் தேர்தலில் தான் என்றார் .

நிலத்திலுள்ள மண் இலங்கைக்குச் சொந்தமானது அல்ல என ஜே.வி.பி எம்.பி.க்கள் கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

ஜே.வி.பி.க்கு இந்த மண்ணில் எதுவும் உரிமை இல்லை. அவர்கள் உண்டியல் ஆட்டி தேடி தமது கணக்குகளில் இட்டுள்ள சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தம். நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன என்ற பொய்யை சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

71 மற்றும் 89 இல் இந்த நாட்டுக்குச் செய்த அழிவுக்கு ஜே.வி.பி. பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாடு முன்னேறாமல் போனதற்கு எல்.ரீ.ரீ.ஈயும் , ஜே.வி.பியும் நாட்டுக்குச் செய்த அழிவு தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US