அரச திணைக்களங்கள் கையகப்படுத்திய காணிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோர தீர்மானம் (Photos)
யாழ். வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகள் வனவள பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வர்த்தமானிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (26.10.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் ஆகியோர்களின் இணைத்தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட போது மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டுக்கு முன் மக்கள் வாழ்ந்த இடங்கள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச திணைக்களங்களால் அரச காணிகளாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “யாழ். மாவட்டத்தில் அரச காணிகள் அதிகம் உள்ள இடம் வடமராட்சி கிழக்கு.
பொதுமக்களுக்கு காணி இல்லாத நிலை
அந்த பகுதியில் அரச திணைக்களங்கள் தமக்கு தேவையான காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்து அபகரித்தால் பொதுமக்களுக்கு வாழ்வதற்கு காணி இல்லாத நிலை ஏற்படும் எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட காணி தொடர்பான விடயங்கள் அனைத்தையும் மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியை கோருவதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் பொலிஸார்கள், பலரும் கலந்து கொண்டனர்.








பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
