இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் முக்கிய பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை நெருங்கி வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு விதிமுறைகள் மதிப்பிடப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் மறுசீரமைப்பு
இந்த நிலையில், விரைவில் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டப்படும் என்று நம்புவதாகவும் இந்த நடவடிக்கை பலதரப்பு கடன் வழங்குநரிடமிருந்து மேலும் 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ள உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, பொதுவாக இலங்கையின் கொள்கை வெளிப்படையானதாக இருக்கும் அது ஏனைய கடன் மறுசீரமைப்புக்களுடன் ஒப்பிடத்தக்கதாக காணப்படும்.
அதே நேரத்தில், உத்தியோகபூர்வ கடன் வழங்குநரான சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்று செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.