இலங்கைக்கு உதவ வேண்டும்! சீனாவுக்கு அறிவுரை கூறும் அமெரிக்கா
இலங்கைக்கு மிகப் பெரிய கடன் வழங்குனராக இருக்கும் சீனா, இலங்கைக்கான கடனை மறுசீரமைக்க உதவ வேண்டும் என்று அமரிக்கா கோருகிறது.
பொறுப்பற்றவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக, இலங்கையர்களின் பொருளாதாரமும் வாழ்க்கையும் சீரழிந்துள்ளன.
இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க திறைசேரியின் செயலர் ஜெனட் யெலன். கடனைத் திருப்பிச் செலுத்துவது சீனாவுக்கும் இலங்கைக்கும் நன்மை பயக்கும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க திறைச்சேரி செயலாளரின் நம்பிக்கை
இலங்கை சீனாவிடம் இதுவரைக் காலத்தில் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.
அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளது.
எனவே அந்தக் கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கும் என்பது தமது நம்பிக்கை என்று அமெரிக்க திறைச்சேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனாவின் போக்கில் அதிக முன்னேற்றத்தைக் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்சுடன் இணைந்து தலைமை தாங்கும் சீனா
2020 ஆம் ஆண்டில் சுமார் 32 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தாத சாம்பியா விடயத்தில் சீனா நடந்துக்கொள்ளும் விதத்தை இலங்கை விடயத்திலும் கையாள வேண்டும் என்று அமெரிக்க திறைச்சேரியின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாம்பியாவின் கடனைப் பற்றி விவாதிக்க ஜூன் 16 அன்று உருவாக்கப்பட்ட 16 நாடுகளைக் கொண்ட கடனாளர் குழுவிற்கு பிரான்சுடன் இணைந்து தலைமை தாங்க சீனா இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.
அரசாங்க தரவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சாம்பியாவின்
கடனில் 5.78 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவுடையது என்று தெரியவந்துள்ளது.
https://tamilwin.com/article/there-debt-crisis-sri-lanka-chinese-scholars-argue-1658054145