பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பிரியந்த படுகொலை விவகாரம்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடன தொடர்பிலான விவாதமொன்றை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டிசம்பர் மாதம் 20 மற்றும் 22ம் திகதிகளில் இந்த விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மேலும் 18 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குஜ்ரன்வாலாவில் உள்ள, விசேட பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், இன்று அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக, பாகிஸ்தான் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
