கொழும்பில் மரணத்தில் முடிந்த கிறிஸ்துமஸ் விருந்து
கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று நடத்தியுள்ள நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கடுமையான காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் நடத்திய வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
