பசறையில் மின் கட்டண பற்று சீட்டுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு (Photo)
பசறையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை நகரிலிருந்து மடூல்சீமைக்குச் செல்லும் வீதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுமார் இரண்டு மணி நேரம் அவ்விடத்திலேயே விழுந்து கிடந்தார் எனவும், அவ்வழியில் செல்பவர்களால் அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்துக்குச் சென்ற அவசர நோயாளர் காவு வண்டி ஊழியர்களால் குறித்த நபர் மரணித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பசறை பொலிஸார் மரணித்த நபரிடமிருந்து மின் கட்டண பற்றுசீட்டு ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர்.
பற்றுச்சீட்டில் பசறை, புஹுல்வத்தைப் பகுதி என விலாசமிடப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து மரணித்த நபர் புஹுல்வத்தைப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக்
கருதிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
