பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 27பேர் பலி
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
மீட்கும் பணி
கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
