கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!
இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
1. தர்கா நகரைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் களுத்துறை வைத்தியசாலையில் கடந்த 28ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்தம் விசமாகியமை மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியா மற்றும் சுவாசப்பை பிரச்சினையினால் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் ,நிமோனியாவினால் உயிரிழந்துள்ளார்.
4. கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர் கலேவெல வைத்தியசாலையில் கடந்த 30ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்துள்ளார்.
5. பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் ரத்தினபுரி வைத்தியசாலையில் கடந்த 30ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் ,நிமோனியா, இரத்தம் விசமாகியமை மற்றும் சுவாசப்பை கோளாறு ஆகிய நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.