11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி அச்சலா இன்று (24.11.2025) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
அது தொடர்பில் மேலும் கருத்து கூறிய அவர்,
எனது தொழிலை முதல் கொண்டு பொய்யான பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சிகள் செய்யும் நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி எனது உயிருக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

என்னால் நடத்தி செல்லப்படும் வழக்கு தொடர்பில் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. என்னிடம் இது தொடர்பில் பல சாட்சிகளும் இருக்கிறது.நான் சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தில் கீழ் பாதுகாப்பு பெற்றும் கொள்ளும் நபர் என்ற வகையிலும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
சில வழக்குகளில் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட முப்படையினரின் சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri