அமெரிக்காவில் சீக்கிய மேயருக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
அமெரிக்காவில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மேயருக்கு மூன்றாவது முறையாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலுள்ள ஹோபோகன் நகரின் மேயரான ரவீந்தர் எஸ்.பல்லா என்பவருக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடு அமெரிக்காவில் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
தொடர் கொலை மிரட்டல்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் குறித்த கொலை மிரட்டல் சம்பவமானது பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் ரவீந்தர் எஸ்.பல்லா கருத்து தெரிவிக்கையில்,
”ஆரம்பத்தில் மின்னஞ்சல் மூலம் வந்த கடிதத்தில் பதவியை இராஜினாமா செய்யும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர், வந்த கடிதத்தில் நான் சீக்கிய மதத்தை பின்பற்றுவதால் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டப்பட்டிருந்தது.
மூன்றாவதாக வந்த மிரட்டல் கடிதம் என்னை நடுங்க வைத்தது. அதில் இது உனக்கு கடைசி எச்சரிக்கை. உடனடியாக பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் உன்னையும், உன் மனைவி மற்றும் குழந்தைகளையும் கொன்றுவிடுவோம் ”என மிரட்டியிருந்ததாக கூறியுள்ளார்.