நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல்
கிளிநொச்சி - முரசுமோட்டைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாபியாக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 0764482667, 0771966429, 0775538710, 0766774024 ஆகிய நான்கு தொலைபேசி இலக்கங்களிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வந்த கரைச்சி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் நந்தகுமாரின் வீடும் நேற்றிரவு மணல் மாபியாக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட வீட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri